பிரான்சில் 140,000 சுவாசக் கவசங்களை கைப்பற்றியது காவல்துறை!

பிரான்சில் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்குத் தயாரான  140,000 சுவாசக் கவசங்களை பிரஞ்சு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


தலைநகர் பாரிசின் வடக்கே அமைந்த சென் டெனிஸ் நகரில் பாரவூர்தி ஒன்றிலிருந்து வீட்டுக்குள் எடுத்துச் சென்று பதுக்கி வைக்க முற்பட்ட போதே காவல்துறையினர் முககவசங்களைக் கைப்பற்றியிருந்தனர். அத்துடன் உரிமையாளரான வியாபாரியையும் பிடித்துள்ளனர்.

முதலாவது சந்தேச நபர் 60 வயதுடையவர் எனவும் இரண்டாவது சந்தேசநபருக்கு 46 வயது எனவும் கூறப்பட்டுள்ளது.

முதலாவது சந்தேச நபர் நெதர்லாந்தில் ஒவ்வொரு முகக் கவசத்தையும் €0.50 படி வாங்கியதாகவும் அவற்றை €0.55 அல்லது €0.60 படி பரிசில் விற்பனை செய்ததாகவும் பாரிசியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

விற்பனையாளர் நிறுவனத்தின் முதலாளிகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் பட்டியலை வைத்திருந்ததாகவும் பாரிசியன் செய்தித்தாள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாவது சந்தேச நபர் கைப்பற்றப்பட்ட முகக் கவசங்களில் ஒரு பகுதியை வாங்க இருந்ததாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் பாரிஸ் பிராந்தியத்தில் பல முகக்கவசங்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒபர்வில்லியர்ஸில் 29,000 முகமூடிகளும் மற்றும் பாரிஸின் வடக்கே செயிண்ட்-ஓவனில் 32,000 முகமூடிகள் கைப்பற்றப்பட்டிருந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.

பிரஞ்சு கடைகளிலும் ஒன்லைனிலும் சுவாசக் கவசங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.

No comments