தேர்தல் முடிவு:திங்கள் முடிவு!


இலங்கை நாடாளுமன்ற தேர்தலை நடாத்த கோத்தா அரசு மும்முரம் காண்பித்து வர எதிhதரப்புக்கள்; அதனை மறுதலித்துவருகின்றன.

தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தேர்தல் இப்போதைக்கு தேவையில்லையென வாதிட்டுவருகின்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஒரு கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடனும் மற்றைய கலந்துரையாடல் சுகாதார தரப்பினருடனும் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் முடிவிலேயே தேர்தலை நடத்துவதா அல்லது பிற்போடுவதாவென்ற முடிவு எடுக்கப்படவுள்ளது.

No comments