கொழும்பு நாய்க்கு கொரோனா
கொழும்பு – ஜா-எல, சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சில இந்த செய்தியை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த செய்தியை சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க நியூஸ் ரேடியோ என்ற சிங்கள ஊடகத்திடம் உறுதி செய்துள்ளார்.
குறித்த நாய்க்கு கடுமையான இருமல் மற்றும் சந்தேகத்துக்குரிய அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது எனச் சொல்லப்படுகிறது.
இதேவேளை சில நாடுகளில் நாய்கள், பூனைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் சிலவற்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் நாய்கள் அல்லது மிருகங்களுக்கு கொரோனா வைரஸ் அல்லது சாதாரண வைரஸ் போன்ற தொற்றுக்கள் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகின்றது.
அத்துடன் “மிருகங்களுக்கு இலகுவில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் மனிதரில் இருந்து வைரஸ் தாெற்று ஏற்படும் சாதகம் உள்ளது. ஆயினும் மிருகங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவும் ஆதாரங்கள் எவையுமில்லை” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹொங் கொங் நாட்டில் கொரோனா தொற்றாளிகளுடன் தொடர்புடைய 17 நாய்கள், 8 பூனைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, எனினும் இரு நாய்களுக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.
Post a Comment