பிரிட்டனில் தமிழ் சகோதர்கள் மரணம்


பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வசிக்கும் நெடுந்தீவைச் சேர்ந்த
அண்ணனும் தம்பியும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி அடுத்தடுத்து இருநாள் இடைவெளியில் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த  திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்  அவர்களின் சகோதரரான ஆனந்தன் சுப்பிரமணியம் நேற்று வியாழக்கிழமை கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் தினம் தினம் ஈழத்தமிர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments