மாரடைப்பினால் மரணமான முன்னாள் போராளி!


விசேட தேவையுடன் வாழ்ந்து வந்த மற்றுமொரு பெண் போராளி மாரடைப்பினால் மரணித்துள்ளார்.கடந்த 21 வருடங்களாக முள்ளந்தண்டு
வடம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துவந்த சிவநாதன் அருந்ததி (முன்னாள் போராளி சுதாமதி) நேற்று சனிக்கிழமை அதிகாலை சாவடைந்துள்ளார்.

மட்டக்களப்பு, கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொனண்ட இவர்,1999 ம் ஆண்டு மாங்குளம் பகுதியில் ஏற்பட்ட இலங்கை படைகளுடள் ஏற்பட்ட மோதலின் போது எறிகணை வீச்சு காரணமாக விழுப்புண் அடைந்தார். நீண்ட காலமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையினை சக்கர நாற்காலியுடனே வாழ்ந்து வந்திருந்தார்.

இவருடைய கணவரும் ஒரு முன்னாள் போராளியென்பதுடன் அவரும் ஒரு மாற்று திறனாளியாவார்.இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் உண்டு. 
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

No comments