லண்டனில் காவல்துறையினர் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு!

லண்டனில் காவல்துறையினர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.


நேற்று வியாழக்கிழமை மக்கள் நொிசலாக நடமாடும் வெஸ்மினிஸ்டர் பாலத்தில் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் உண்மையான கதாநாயகர்களுக்கு காவல்துறையினரால் கைதட்டி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வை பல ஊடகங்களால் படமாக்கப்பட்டன. வெளிவந்த காணாெளிகளில் பாலத்தின் ஒரு பகுதியில் நின்றிருந் காவல்துறையினர் சமூக இடைவெளியைப் பின்பற்றியிருக்கவில்லை. மற்றொரு பகுதியில் நின்ற காவல்துறையினர் சமூக இடைவெளியில் நின்றவாறு கைகளைத் தட்டியிருந்னர்.

இது இப்படி இருக்க காவல்துறையினரால் எப்படி பொதுமக்கள் வினவ முடியும்? இது நியாயமற்றது என பரவலாகவிமர்ச்சிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து எல்.பி.சி வானோலியின் கேள்விக்கு பதிலளித்த லண்டன் மேயர் சாதிக் கான் இவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றியதாகத் தனக்குத் தெரியவில்லை என தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

கால்துறையினரிடமும், உயிர்காப்பு வண்டியினரிடமும் நிர்வாகத்தினர் கேட்வி கேட்பார்கள் என நினைக்கிறேன் என்றார்.

வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் கைதட்டலில் வெளிவந்த காளொணியில் தொடர்பில் லண்டன் மெட்ரோ காவல்துறை ஆணையாளர் டேம் கிரெசிடா டிக் கூறும்போது:-
பாலத்தில் ஒரு பகுதியில் இரண்டு மீட்டர் தூர வழிகாட்டுதல்களைக் கவனிப்பதைக் காணலாம், அதேநேரம் பாலத்தின் மற்றொரு பகுதியில் அதிகாரிகள் அவ்வாறு இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

தமீர் ரஃபி வெளியிட்ட காணொளியில் பல காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் விதிமுறைகளை புறக்கணிப்பதைக் காட்டியுள்ளது.

காவல்துறையினர் சமூக விதிகளை கடைபிடிக்கவில்லை என விமர்சிக்கும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவந்ததை அடுத்து டவுனிங் தெரு நிர்வாகம் இப்போது இப்பிரச்சினையில் தலையிட்டுள்ளது.

எல்லோரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் அத்துடன் சமூக இடைவெளி விதிகளை அவைரும் கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,

இதனால் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் கடினமாக உழைப்பவர்கள் மீதான எங்கள் பாராட்டுகளை நாங்கள் பாதுகாப்பாகக் காட்ட முடியும்  என்று பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

No comments