ஊரடங்கு தளர்வு பற்றி பேச்சு:இன்னொரு புறம் கைது!


ஊரடங்கு நீக்கம்,தேர்தல் என அறிவிப்புக்கள் ஒருபுறம் பேசப்பட மறுபுறம் கணக்கு காட்டும் கைதுகள் இலங்கை காவல்துறையால் வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அவ்வகையில் கோப்பாய் காவல் நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடினர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதி இன்றி ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் காவல்துறையினர்; மேலும் தெரிவித்தனர்.

இதனிடையே யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஊர டங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் ஆலோசனையை வழங்கவு ள்ளதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments