கிராம சேவையாளர்களை தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விலகல்!


கொரோனாவினால் முடங்கியுள்ள மக்களிற்கு வெறும் 5,000ரூபாவை வாழ்வாதார உதவியாக வழங்கும் கோத்தா அரசினது நடவடிக்கை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கொடுப்பனவு பட்டியல் பணிகளை கிராம சேவகர்களிடமிருந்து, அரசாங்க அரசியல்வாதிகள் கைப்பற்றியுள்ளார்களென எதிர்கட்சி தலைவர் அலுவல ஊடக சந்திப்பில்; மனோகணேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அரசாங்க இயந்திரத்தின் முதல் முகவரான கிராம சேவகர்கள் தமது பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளமை இதற்கு, சான்றாக விளங்குகிறது. இதைவிட வாழ்வாதார கொடுப்பனவு வழங்களில் அரசின் அலங்கோலத்தை பற்றி சொல்ல என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூபா 5,000 கொடுப்பனவு வழங்கும் பட்டியல் தயாரிப்பு பணிகளை கிராம சேவகர்களிடம் இருந்து, அரசாங்க கட்சி அரசியல்வாதிகள் கைப்பற்றியுள்ளார்கள். இதற்கு ஜனாதிபதி இடம் கொடுத்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே அரசினது இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு  அபிவிருத்தி அலுவலகர்கள் சங்கமும் பணிகளிலிருந்து விலகவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

No comments