பாஸ்டர் ஊடாகவே தொற்று; அச்சம் தவிருங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளா்களுக்கும் சுவிஸ் பாஸ்டர் ஊடாகவே தொற்று ஏற்பட்டது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டவில்லை. எனவே மக்கள் குழப்பமடைய வேண்டாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாாிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படுகின்றனா் என தெரிவித்த சத்தியமூர்த்தி, மக்கள் எந்தவொரு சந்தா்ப்பத்திலும் அச்சமடையாமல், சுகாதார நடைமுறைகளை சாியான பின்பற்றுமாறும், அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

No comments