உல்லாச தொடரூந்தில் கிம்; மண்டைய குழப்பும் அமெரிக்கா!

 
வடகொரியா அதிபர் கிம்மின் உடல்நிலை குறித்தும், அவர் தொடர்பான புதிய செய்திகள் ஏதும் வெளிவராத நிலையில் பல முரண்பாடான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில், வட கொரியாவின் Rodong Sinmun எனும் செய்தித்தாள், கிம் வட கொரியாவின் உல்லாசத் தலமொன்றில் இருக்கலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிம் குடும்பத்தாரின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள Wonsan நிலையத்தில்கிம்முக்குச் சொந்தமான சிறப்பு தொடரூந்து  நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அத்தோடு வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட வட கொரியக் கண்காணிப்புக் குழு வெளியிட்ட செயற்கைத் துணைக் கோளப்படங்களின் அடிப்படையில் இம்மாதம் 21 லிருந்து 23 ஆம் தேதி வரை அந்த தொடரூந்து அங்கிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  
திரு. கிம்மின் உடல்நிலை குறித்து வெளிவரும் தகவல்கள் பற்றி இதுவரை வட கொரியா ஏதும் கருத்துரைக்கவில்லை.
எனினும்  கிம்மின் உடல் நிலையைப் பரிசோதிக்க சீனாவிலிருந்து மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டதாக Reuters செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் கிம்மின் உண்மை நிலவரம் தெரியாது அமெரிக்க அதிகாரிகளும் ஊடகங்களும் தொடர்ந்து ஊகங்களை வெளியிட்டவண்ணம் உள்ள நிலையில் வடகொரியா இதுவரை கிம் நிலை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments