கொரோனாவை சாதகமாக்கி பணம் ஈட்டுவர்களுக்கு போப்பாண்டவர் கண்டனம்

கொரோனா தொற்று நோயை சாதமாகப் பயன்படுத்தி பண வருமானத்தை
பெருக்கிக் கொள்பவர்களை போப்பாண்டவர் பிரான்சிஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

சமூக மற்றும் பொருளாதார இடையூறுகளை சரிக்கட்டுகிற விதத்தில், இலாபம் அடைவதற்காக பலரும் குற்றங்களை செய்கிறார்கள். இவர்களை அதிகாரிகள் எச்சரித்த வண்ணம் உள்ளனர்.

மற்றவர்களின் தேவைகளை ஈடுசெய்து, விற்று, பணம் சம்பாதிப்பவர்கள் மனங்களில் ஆன்மிக மாற்ற அனுபவம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

யேசு பிரானை யூதாஸ் காட்டிக்கொடுத்ததையும் அவர் விவரித்தார். ஒவ்வொருவருக்குள்ளும் சின்னதாய் ஒரு யூதாஸ் இருக்கிறார்கள். அவர்தான் மற்றவர்களுக்கு நம்பிக்கையாக இருப்பதற்கும், சுய லாபத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கும் இடையேயான தேர்வை செய்கிறார். 

நம்மில் ஒவ்வொருவரும், துரோகம் செய்கிற திறனை பெற்றிருக்கிறோம். நமது சுய நலன்களுக்காக மற்றவர்களை விற்கிறோம்” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

No comments