கோத்தாவிடம் திட்டமில்லை:புதுக்குடியிருப்பும் அனுமதி கேட்கிறது!


இலங்கை அரசின் உதவிகள் ஏதும் வந்தடைந்திராத நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 12 மில்லியன் நிதியை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆளுநர்; அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் ஆளுனரிடம் இருந்து நிதி விவகாரங்களிற்கு அனுமதியை பெறவேண்டியிருப்பதால் புதுக்குடியிருப்பு பிரதேச சபையும் விண்ணப்பித்துள்ளது.

ஏற்கனவே யாழ்.மாவட்டத்திலுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேசசபை  உள்ளிட்ட பல சபைகள் இதே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் அதனை ஆளுநர் குப்பை தொட்டியினுள் வீசியிருந்தார். 

இதனிடையே அரசினால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, சிறுநீரக சிகிச்சைக் கொடுப்பனவு, அரச உர மானியம், முதியவர் கொடுப்பனவு என்பவற்றை தொடர்ந்து வழங்குவதை தற்போது தனது சாதனையாக காண்பிக்க முற்பட்டுள்ளது.

இவைகன் ஏற்கனவே அரச நடமுறையிலிருந்த நிவாரணங்கள். இவற்றில் சிறிய அதிகரிப்பு, வீட்டுக்கு வந்து கொடுத்தல் போன்றவற்றினை கோத்தா அரசு முன்னெடுக்கின்றது.

எனினும் உலகை ஆட்டிப்படைக்கிற இந்த தருணத்தில் அரசின் புதிய நிவாரணங்கள் என்ன. கல்வி தொடர்பான திட்டங்கள், வரும் பட்டினித் தவிரப்புக்கான திட்டம் தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒரு நெருக்கடியில் எந்த அரசாக இருந்தாலும் முதலில் உடனடி நெருக்கடிகளுக்கு தீர்வு காணும். எனவே அந்த வகையில் உடனடி நடவடிக்கையாக வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசு இப்பொழுது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே மேற்படி நிவாரணங்களை அறிவித்துள்ளது.

ஆனால் அத நீண்ட கால அடிப்படையிலான உதவிகள் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments