கொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க!

மத்திய சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கைதிகளை பரோலிலும் விசாரணை கைதிகளை ஜமீனிலும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் சிலர் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஏற்கனவே நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மக்கள் மன்றத்தில் தீர்மானம் இயற்றியும் கவர்னர் அவர்களை விடுதலை செய்வதை மத்தியில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கைகளால் நிறுத்தி வைத்துள்ளார். 
இந்த சமயத்தில் அவர்களை விடுதலை செய்யச்சொல்லி  சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.அறிக்கையில் தமிழக அரசே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்,
நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய். என கோரிக்கைகள் எழுப்பியிருக்கிறார்கள் 
 


No comments