விளக்கு பிடிக்கின்றனர் தரகர்கள்?


மக்கள் குடியிருப்புக்களிற்கு மத்தியிலுள்ள கோப்பாய் கல்வியியல் கல்லூரியை தனிமைப்படுத்தலிற்காக அரசு சுவீகரித்துள்ளமை குடியிருப்பாளர்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

எனினும் யாழ்ப்பாணத்தில் இருந்து விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்ற ராணுவ வீரர்கள் மீள கடமைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை கொரோனா தொற்றுடைய எவரையும் கல்லூரிக்கு அழைத்து வரவில்லை. யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி விடுமுறையில் நிற்கின்ற படைவீரர்களையே தனிமை படுத்துவதற்காகவே கல்லூரியில் இரண்டு விடுதிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கோத்தபாயவின் ஆதரவு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டு விளக்கு பிடித்துள்ளன.

அச்சமடைந்துள்ள மக்களை சந்திக்காது பலாலி இராணுவ தலைமைய செய்திகளை காவி இலங்கை அரசின் அடுத்த கட்ட இன அழிப்பில் இத்தகைய தரப்புக்கள் மும்முரமாக களமிறங்கியுள்ளன.

No comments