காவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்?
கொரோனாவை வென்ற தலைவன் கோத்தபாய என அவிழ்த்துவிடப்பட்ட கதை அதன் உள்வீட்டு கைச்சரக்கு என்பது அம்பலமாகியுள்ளது.தாங்களாகவே புதிய இணையமொன்றை உருவாக்கி கதையினை அவிழ்த்துவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
COVID 19 இற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கிய உலக தலைவர்களில் கோத்தபாயா ராஜபக்சே 9 ஆவது இடம் பிடித்ததாக The Morning என்கிற ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது .இந்த ஊடகம் ராஜபக்சே குடும்பத்தின் நெருக்கமான சகவாக கருதப்படும் Derana ஊடக வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி Dilith Jayaweera என்பவருக்கு சொந்தமானது. இந்த செய்தி தமிழ், ஆங்கில ஊடகங்களில் எந்தவொரு Background checks யும் செய்யப்படாமல் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வருகிறது
இந்த செய்தி www.cmawebline.org என்கிற இணையதள ஆய்வை ஆதாரமாக கொண்டு வெளியிடப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது . இலங்கை 9 ஆவது இடம் பிடித்தாக செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வில் இலங்கை Covid 19 ஐ கையாண்டது பற்றிய தகவல்கள் (Reference) www.healthreviewglobal என்கிற இணையதளத்தில் இருந்தது பெறப்பட்டதாக (Citation) சொல்லப்பட்டு இருக்கிறது .
ஆனால் குறிப்பிட்ட ஆய்வில் இலங்கை பற்றி Reference ஆக சொல்லப்படும் www.healthreviewglobal என்கிற இணையதளம் March 19, 2020 திகதி உருவாக்கப்பட்டு இருக்கிறது . அதாவது ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளத்திற்கு பதிவு செய்யப்பட்ட எந்த முகவரியும் இல்லை . தொடர்பு கொள்ளுவதற்கான வசதிகள் , இணைய தள நிருவாகிகள் பற்றிய எந்த தகவல்களும் இல்லை.
இதுமட்டுமல்லாது ஆய்வை செய்ததாக சொல்லப்படுகிற Certified Management Accountants, Australia நிறுவனத்தின் இலங்கை தலைவராக முன்னாள் SEC Chairman, Nalaka Godahewa என்பவர் இருக்கிறார். இவர் நிதி முறைகேடு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர், இப்போது ராஜபக்சே குடும்பத்தின் கட்சியின் வேட்பாளராக எதிர்வரும் பொதுத்தேர்தலில் களம் காண்கிறார்
இதுமட்டுமல்லாது CMA Australia இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள GRID Index: Tracking the Global Leadership Response in the COVID-19 Crisis என்கிற இந்த ஆய்வில், ஆய்வு ஒன்றின் அடிப்படை விடயங்கள் (Methodology, Data Collection) என எதுவும் இல்லை. எவ்வாறு GRID INdex உருவாக்கப்பட்டது என்கிற விடயம் கூட இல்லை. Reference Section இல் எந்தவொரு Reliable Source யும் இணைக்கப்படவில்லை கட்டுரை வடிவில் எழுதப்பட்டுள்ள இந்த ஆய்வில் தெற்காசியா பற்றி South Asia ஒரு பகுதி இருக்கிறது .இதில் இந்தியா பற்றி 8 Paragrapgh எழுதப்பட்டு இருக்கிறது .இறுதி Paragrapgh இல் இலங்கை பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது . இது தவிர வேறு எந்த தகவல்களும் இல்லை
கோத்தபாயா ராஜபக்சே தரப்பின் இந்த மோசடியை Colombo Telgrapgh என்கிற ஆங்கில இணையதளம் இன்று அம்பலப்படுத்தி இருக்கிறது .ராஜபக்சே தரப்பு இந்த மோசடியை செய்ய இரண்டு பிரதான காரணங்கள் இருக்கலாம்.
1. சில நாட்களுக்கு முன்னர் லண்டனை தளமாக கொண்ட Deep Knowledge Group என்கிற ஆய்வு நிறுவனம் ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் Covid 19 தொடர்பான ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்த்து இருந்தது . அத்துடன் Forbes என்கிற பிரபலமான சஞ்சிகை DKG நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட முதல் 40 பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை.
2. உலக வங்கியின் தெற்காசியா பிராந்தியத்திற்கான Chief Economist Hans Timmer தெற்காசியா நாடுகளில் ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள போகிற ஆபத்தை வெளிப்படுத்தி இருந்தார் .குறிப்பாக எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி (Negative GDP) வீதம் ஏற்பட போகும் தெற்காசியா நாடுகளின் பட்டியளில் இலங்கையை இணைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்
ராஜபக்சே குடும்பம் அரசியல் இலாபங்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள் என்பதற்கு கோத்தபாயா ராஜபக்சே 9 வது இடம் என்கிற செய்தி ஒரு சான்று மட்டுமே .
Post a Comment