மன்னாரில் லெப்.கேணல் விக்டரின் சகோதரி தேர்தலில் போட்டி!!

மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான லெப்.கேணல் விக்டரின் சகோதரி மாலினி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சார்பில் போட்டியிடுகிறார். வன்னியின் பல்வேறு பகுதிகளில் வலய கல்வி பணிப்பாளராக பணியாற்றிய இவர் ஓய்வுபெற்ற பின்னர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வன்னி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முன்னாள் பெண் போராளி ஒருவரையும் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேசிய பட்டியலில் உள்ளடக்கியுளார். சிறந்த சமூக சேவையாளரான இவர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் பொருளியல் துறை பேராசிரியர் சிவநாதன் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மிக நீண்ட காலமாக தமிழ் தேசியத்துக்காக பணியாற்றி வருபவரும் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் ஆங்கிலத்தில் பல வெளியீடுகளை செய்திருப்பவருமான செல்வேந்திரா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.No comments