திருமலையில் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் ரூபன் தேர்தலில் போட்டி!

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியற்துறைப்
பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) களம் இறங்குகிறார்.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.  இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி  பின்னர் இராணுவத்தினரிடம் ரூபன் சரண் அடைந்திருந்தார்.

1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார். இவரது சகோதரர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகளாக இணைந்து பணியாற்றியுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

ரூபனின் மனைவி வைத்தியராக திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றுகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் சண்டையில் தனது அவயவம்  ஒன்றை இழந்த முன்னாள் போராளி ஒருவர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களம் இறங்குகிறார். இவருக்கான ஆசனமும் தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

No comments