ஹெரோயின் கப்பல் கரைக்கு வந்தது?

தென்பகுதி கடலில் அண்மையில் கைப்பற்றப்பட்ட 6000 மில்லியன் ரூபா 400 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் இன்று (05) டிகோவித்த மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட 20 பேருடன் படகுகளும் இன்று கரைக்கு கொண்டு வரப்பட்டன.

சம்பவத்தில் ஈரான், பாகிஸ்தான் பிரஜைகள் 20 பேர்வரை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் இணைந்து இவற்றை கைப்பற்றியிருந்தனர்.

No comments