கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!

கொரோனொ வைரசான COVID-19 கிருமிக்கு எதிரான தடுப்பூசி பரிசோதனை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சியெட்டலில் உள்ள ஆய்வு நிலையத்தில், சோதனை அடிப்படையிலான அந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஆரோக்கியமான, இளம் தன்னார்வு தொண்டூழியர்கள் 45 பேர் இந்த தடுப்பூசிச் சோதனையில் பங்கேற்கின்றனர் என்று கூறப்படுகிறது..
பெரிய அளவில் அந்தத் தடுப்பூசியைத் தயாரிக்க இன்னும் அதிக காலம் பிடிக்குமெனவும், சோதனைக் காலம் முடிந்து  தடுப்பூசி சந்தைக்குவர,குறைந்தது 18 மாதங்கள் வரை ஆகலாமெனப் உலக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றன.

No comments