கொரோனொ வீரியம்; ஜேர்மனி விடுத்துள்ள முக்கிய கட்டுப்பாடுகள்;

கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் பொருட்டு, அத்தியாவசியமற்ற கடைகள் முதல் பார்கள், கிளப்புகள், தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தேவாலயங்கள் வரை அனைத்தையும் மூடும் அறிவுறுத்தல்களை ஜெர்மனியின் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்தோடு பலசரக்குக் கடைகள், சந்தைகள், வங்கிகள், மருந்தகங்கள் மற்றும் விநியோக சேவைகள் திறந்த நிலையில் இருக்கும் என்றும், உணவகங்கள் மற்றும் பிற உணவு நிறுவனங்கள் பொதுவாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 இதற்கிடையில், விமான நிறுவனங்கள் தற்காலிகமாக பிராங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து இரவில் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் அனுமதிக்கப்படும் என்று ஹெஸ்ஸின் பிராந்திய அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சர் கூறினார், இது ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையம் என்பதால் தொடர்ந்து இயங்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

ஏற்கனவே பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இன்றிலிருந்து மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments