இதுவரை 28 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (16) மட்டும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த அதிகாரி இப்போது அங்கொடை ஐடிஎச்சில் சிகிச்சை பெறுகிறார். இவர் கடந்த வாரம் இடம்பெற்ற ரோயல் தோமையன் பிக் மச்சில் கலந்து கொண்டவர் என்பது அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திலையில் குறித்த அதிகாரியுடன் நெருக்கமாக இருந்த விமான நிலைய உறுப்பினர்களை சுய தனிமைப்படுத்தல் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டறியப்பட்டவர்களில் நால்வர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையத்தில் தங்கி இருந்தவர்களாவர்.

அத்துடன் ஒருவர் இந்தியா - கேரளாவில் இருந்து நாட்டுக்கு திரும்பியவராவார்.

மற்றையவர் பாெலனறுவை வைத்திய சாலையில் கண்காணிக்கப்பட்ட நபராவார்.

மேலும் இன்று மதியம் கண்டறியப்பட்ட 13 வயது சிறுமி கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 2வது நபரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கியோர் எண்ணிக்கை 28 ஆகியுள்ளது.

No comments