பதுங்கிய ரவி:பிணை கோரி விண்ணப்பம்?


ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக சொல்லப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான பிடியாணை உத்தரவை நீக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணிகள்  குறித்த ரீட் மனுவை இன்று (10) தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிடியாணை பெற்றவர்களை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடியாணை உத்தரவை கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க  பிறப்பித்திருந்தார்.
எனினும் அவரை கைது செய்ய முடியாது அவர் பதுங்கியிருப்பதாக காவல்துறை அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments