பிரித்தானியாவில் இரண்டாவது மரணம்! கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோயினால் இரண்டாவது நபர் மில்டன் கீய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 80 வயதுடைய ஆண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபருக்கு பரிசோதனைகள் நடத்திய மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதை உறுதி செய்யதனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதேநாளில் குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார். இது பிரித்தானியாவில் நடத்துள்ள இரண்டாவது உயிரிழப்பாகும்.

ஏற்கனவே 70 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.

நேற்றயை தினம் அதிகளவான மக்களுக்கு கொரோனா வைரல் தொற்று தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை  164 பேர் இத்தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

No comments