மக்களை ஏமாற்றி அம்பிகா புகழ் பாடும் கூட்டமைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பெண் வேட்பாளராக மனித உரிமை செயற்பாட்டாளரான அம்பிகா சற்குணநாதன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இருந்த அம்பிகா நேற்று (06) தனது வேட்பாளர் ஆசனம் உறுதியானதை அடுத்து தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்து கொண்டார்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த சிலர், "ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அனுசரணையில் இருந்து இலங்கை விலகியதால் தன் பதவியை துறந்த வீரத் தமிழ் பெண்" அம்பிகா என்று போலியாக அவருக்கான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை வகித்திராத கட்சிக்கு அப்பாற்ப்பட்ட அம்பிகாவின் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் கடும் அதிருப்திக்கு இருக்கும் நிலையில் இவ்வாறான போலி பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பது பலரிடையிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments