இனஅழிப்பு அரசை காப்பாற்றிய நளினி இரட்ணராசா?


இன அழிப்பு இலங்கை அரசிற்கு ஜநாவில் காலநீடிப்பினை பெற்று வழங்குவதில் முன்னின்று செயற்பட்ட நளினி இரட்ணராசாவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் போட்டியிட தெரிவு செய்யப்பட்டவர்களுள ஒருவரென்ற செய்தி அனைத்து மட்டங்களிலும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியினால் பரிந்துரை செய்யப்பட்ட ஐந்து வேட்பாளர்கள்; பெயரில் மா.உதயகுமார்,ஞா.சிறீநேசன்,சீ.யோகேஸ்வரன், இ.சாணக்கியன் மற்றும் நளினி இரட்ணராசா உள்ளடங்கியுள்ளனர்.

இதனிடையே தமிழரசு அல்லக்கையென அடையாளப்படுத்தப்பட்ட சுவிஸ் துரைரத்தினம் என்பவர் கூட நளினி இரட்ணராசா தெரிவில் சீற்றமடைந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தான் சொன்னால் சுமந்திரன் எழுந்தாடுவார் என சொல்லிவந்த துரைரத்தினமே நொந்து போன பரிதாபம் நடந்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுகட்சி பெண் வேட்பாளர் தெரிவில் அதிருப்தி அடைந்த தமிழரசுகட்சி இளைஞர்கள் தமிழரசுகட்சி தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துரைராசிங்கம், சுமந்திரன் போன்றவர்களின் கொடும்பாவி எரிக்கப்பட உள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர். தகுதியான, ஆளுமையுள்ள சமூகத்தில் நன்மதிப்பு உள்ள வாக்கு வங்கி உள்ள பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்துமாறு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ரணில் ஆட்சிக்காலத்தில் ஜெனீவாவிலிருந்து இலங்கையினை காப்பாற்றுவதில் முன்னின்று செயற்பட்ட சுனந்த தேசப்பிரிய,நிமல்கா பெர்னான்டோ ஆகியோருடன் இணைந்து செயற்பட்ட பெண்ணான நளினி இரட்ணராசாவே தற்போது தமிழ் மக்களை காப்பாற்ற களமிறங்கியுள்ளார்.

No comments