சம்பந்தன் கடவுளின் கொடை: ஆதவாளர்களிடையே சுமா?

காலத்தையும் கடந்து கடவுள் தமிழர்களுக்குக் கொடுத்திருக்கும் கொடைதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். பல இக்கட்டான காலகட்டங்களில் அந்தத் தலைமை எங்களுக்குத் தேவை. அவரை நாங்கள் தூக்கி எறியமுடியாது. இவ்வாறு நேற்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளார் எம்.ஏ. சுமந்திரன்.
‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில் யாழ்.வீரசிங்கம் மண்ட பத்தில் நேற்று மாலை கட்சி ஆதரவாளர்களிடையேஉரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் காலத்தையும் கடந்து கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கும் கொடை அவர். நாங்கள் இன்னமும் பாக்கியம் பெற்றவர்கள். அவரை நாங்கள் தூக்கி எறியப் போவதில்லை . அவரால் இயன்ற வரை அவர் எங்களை வழிநடத்துவார். முன்னே நின்று வழிநடத்துவார். அவர்தான் எங்கள் முகமாக இருப்பார். அதில்தான் எங்கள் பலம் தங்கியிருக்கின்றது. அதற்காக மற்றவர்களுக்கு இடம் இல்லை என்றல்ல.
நான் பகிரங்கமாகச் சொல்லும் விடயம், இளம் தலைவர்களை உருவாக்கவேண்டுமென்பது. கட்சியின்மீது நான் வெளிப்படையாக வைத்திருக்கும் விமர்சனமும் அதுதான். இளைஞர்களுக்கு, பெண்களுக்கு கட்சியில் இன்னமும் உரிய இடம்கொடுக்கப் படவில்லை . அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். சென்ற தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் எங்கள் நியமனப்பத்திரத்தில் நியமனம்கொடுக்கவேண்டும் என்று பகிரங்கமாகச்சொன்னவன்நான். அந்த முயற்சியில் நான் பெரும் தோல்வியடைந்தேன்.
இன்னுமொன்றை நான் பகிரங்கமாகச் சொல்கிறேன். இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கே திரும்பவும் நியமனம் கொடுப்பதாக இருந்தால் எஞ்சிய இடங்கள் கொஞ்சம்தான் உள்ளன. அதில் நாங்கள் நிறுத்துவது கட்டாயம் தோற்பவர்களை மட்டும்தான். ஏனென்றால் அவர்கள்வென்றால் நாங்கள் தோற்று விடுவோம். அதனால்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன், இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தானாகவே நியமனம் கொடுக்கவேண்டாம்.
யுத்த காலத்தை கடந்து வந்த கட்சி இது. யுத்தகாலத்திற்கு முன்னரும் இருந்தது, யுத்த காலத்திற்கு பின்னரும் இருந்த கட்சி. யுத்தகாலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி. செயலிழந்திருந்த கட்சி. திடீரென ஜனநாயகப் பண்புகள் வந்து விடா.
30 வருடம் வேறுவிதத்தில் பழகி விட்டோம். சொன்னதை செய்தது. யுத்தகாலத்தில் கூட பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஒன்று மட்டும் இருக்க வில்லை . அது ஒன்றாக வந்தது எப்படியென்பதும் எல்லோருக்கும் தெரியும். 
2014 இல்ஆட்சிமாற்றம் ஏற்பட நாங்கள் ஒரு முக்கிய காரணி. இது பலருக்குத்தெரியாத ஒருவிட யம். 2012ஆம் ஆண்டு சோபித தேரர் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தை ஆரம்பித்தபோது தேசிய புத்தகசாலையில் ஒருசிறிய அறையில் அந்தக் கூட்டம் நடந்தது. அந்த முதல்கூட்டத்திலேயே நான் பேசினேன். நாங்கள் அந்த மாற்றத்துக்கு அடிகோலிகளாக இருந்திருக்கின்றோம். இரண்டு தடவைகள் நான் சம்பந்தனையும் அழைத்துக்கொண்டுபோய் அவர்களின் விகாரையில் பேசி யிருக்கின்றோம். – என்றார்.

No comments