தமிழர்களை வெட்டி கொன்ற சுனில் விடுதலை

தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் 2000ம் ஆண்டு தமிழர்கள் எட்டுப் பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க இன்று (26) ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் சுனில் ரத்னாயக்க பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார் என்று பலமுறை செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இப்போது பொது மன்னிப்பு உறுதி செய்யப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

2000 டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளை பார்வையிட சென்றவர்களில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் இராணுவத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது தப்பியோடி வந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் 14 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் இராணுவச் சிப்பாய்கள் ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

2015 யூன் 25 அன்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு வழங்கிய தீர்ப்பில், சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஏனைய நான்கு சிப்பாய்களும் போதிய ஆதாரமில்லை என்று தெரிவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

No comments