நால்வர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் இன்று (26) குணமடைந்துள்ளர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இப்போது கொரோனா தொற்றில் இருந்து 7 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 95 ஆக குறைந்துள்ளது.

இதேவேளை 225 பேர் கொரோனா சந்தேகத்தில் கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்று மாலை 4.45 மணி வரை எந்த கொரோனா தொற்றாளிகளும் கண்டறியப்படவில்லை என்பதும் சுட்டிக்காடத்தக்கது.

No comments