வீடு திரும்பினார் மிருசுவில் கொலையாளி?


யாழ் மிருசுவில் பகுதியில் 5 வயது பாலகன் உட்பட 8 பேரை கொலை செய்த இராணுவப் படைச் சிப்பாயான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு இலங்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமன்னித்து அளித்து விடுதலை செய்துள்ளார்.

தனது தேர்தல் கால உறுதி மொழி பிரகாரம் அவர் இவ்விடுதலைக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் கொரொனோ பற்றிய அச்சத்தில் நாடு மூழ்கியிருக்க சிறையில் கொரோனோ தொற்று ஏற்படலாமென தெரிவித்தே அவர் இராணுவப் படைச் சிப்பாயான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவினை விடுவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையிலிருந்து இன்று முற்பகல் அவர் வெளியேறியதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன்; தெரிவித்தார்.

யுத்த காலத்தில் முன்னெடுத்த சிறந்த சேவை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட எட்டு பேரில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறு குழந்தையொன்றும் அடங்கியிருந்தனர்.

கோலைகள் தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் திகதி விசாரணைகளை நடத்திய நீதிபதிகளினால் சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments