தொடரும் மருந்து விசிறல்?


கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள விசேட அதிரடிப்படை அணி கொரோனோ தொற்றுள்ள பிரதேசங்களில் தனது சுத்திகரிப்பு பணிகளை
ஆரம்பித்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை நகரம் மற்றும் புலோலி பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை முதல் மருந்து விசிறல்  பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பருத்தித்துறை பிரதேச செயலகம் மற்றும் நகராட்சி மன்றம் என்பவற்றினுடன் இணைந்து பருத்தித்துறை காவல்துறையினர் இப்பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனிடையே வலிகாமம் வடக்கு பிரதேசத்திலும் கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

கொரோனோ தொற்று தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

கிருமி தொற்று நீக்கும் மருந்து அடிக்கும் நடவடிக்கைகள் உள்ளுராட்சி மற்றங்களாலும் அதே நேரம் கொழும்பிலிருந்து வந்த விசேட குழுவினராலும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments