மக்களை பதறியடிக்க வைத்த வதந்தி!

திருகோணமலை கோணேஸ்வரம் மற்றும் நல்லூர் உட்பட நாட்டின் பல இந்து ஆலயங்களில் சிலை, கலசம் மற்றும் கோபுரம் உடைந்ததாக கூறி நேற்று (27) இரவு முதல் உண்மைக்கு புறம்பான தகவல் ஒன்று முகநூலில் பரவியதால் இன்று (28) அதிகாலை மக்களிடையில் குழப்பம் ஏற்பட்டது.

குறித்த சம்பவத்தினால், ஆண்களுக்கு பாதிப்பு என்றும், அதனால், மஞ்சள் நீரில் நீராட வேண்டும் என்றும் வதந்தி பரப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் எதுவும், நாட்டில் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“தமது ஆலயம் குறித்த வதந்தி ஒன்று பரவியது. அது உண்மைக்கு புறம்பானது. ஆலய நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறுகின்றன” என்று திருகோணமலை ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

No comments