வீதியெங்கும் இராணுவம்:கடுமையாகின்றது நிலவரம்?


ஊரடங்குச் சட்டம் கடுமையாக்கப்பட்டதனை தொடர்ந்து வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் அதே போன்று ஏ-9 பிரதான வீதி உள்ளிட்ட பிரதான இணைப்பு வீதிகள் எங்கும் இராணுவம் சோதனைச் சாவடிக்களை அமைத்து பொது மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

சுகாதார பணியாளர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், விவசாயிகள் போன்றவர்கள் அனுமதிக்கப்படுவதோடு ஏனையவர்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.ஏனையோர் அந்தந்த சோதனை சாவடிகளிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே ஊரடங்கு நேரத்தில் சாவகச்சேரி பொலிசாரின் அனுமதிப் பத்திரத்துடன்  வாகனத்தில் சென்ற போது கைது செய்யப்பட்ட  சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் உட்பட அவரது ஆதரவாளர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் நேற்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

ஊரடங்கு வேளையில் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உணவு தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கச் சென்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டு வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது.

விசாரணையின் பின்னர் நகரசபை உறுப்பினரும் ஆதரவாளர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments