திருமலை திரும்பிய மீனவர்கள்?


யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு 10 மீனவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு மாதகாலமாக தங்கியிருந்த நிலையில் பொலிஸார் அவர்களை கடல் வழியாக அழைத்துவந்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, கணவர் மீன் பிடிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றதாகவும், அவர் ஒரு மாத காலமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என மீனவரின் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதையடுத்து, திருகோணமலை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்பரப்பில் இருந்து திருகோணமலைக்கு மீனவர்களின் மூன்று படகுகள் எடுத்துவரப்பட்டன.

No comments