அங்கயனின் மாவட்ட செயலக அலுவலகத்திற்கு சீல்?


யாழ்.மாவட்டச் செயலக கட்டிடத்தில் அங்கயனின் தேர்தல் அலுவலகம் போன்று இயங்கிய ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்றைய தினத்துடன்  சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

அவ்வலுவலகம் நேற்றைய தினமும் இயங்கிய நிலையில் தமிழரசுக்கட்சி தரப்பு மாவட்ட மாவட்டச் செயலாளரின் கவனத்துற்கு கொண்டு சென்ற நிலையில் உடன் இழுத்து மூடுமாறு உத்தரவிடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கட்டிடத்துள்  குறித்த ஒருங்கிணைப்புச் செயலகமானது முன்னர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்த அங்கயன் இராமநாதனால் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் பணிகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை விடுத்தது.

இருந்தபோதும் தேற்றைய தினமும் மாவட்டச் செயலகத்தில இருந்த குறித்த அலுவலகம் இயங்குவதனை அவமானித்து மாவட்டச் செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்தே அலுவலகம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

No comments