யாழில் கொரோனவுடன் சிங்கள படைச்சிப்பாய்?


யாழில் கொரோனா தொற்று இல்லையென வாதிடப்பட்டுவருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொரொனா சிகிச்சைப் பிரிவில் சிங்கள படைச்சிப்பாய் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரொனா நோற் தொற்று சந்தேகத்திலேயே குறித்த நபர்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சியை சேர்ந்த குறித்த படை சிப்பாய்; வவுனியாவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரொனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பபட்டுள்ளார்.

இவ்வாறு அனுப்பப்பட்டவர் போதனா வைத்தியசாலையின் விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றபோதும் இதுவரை கொரோனா உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் நோயாளியின் இரத்த மாதிரிகள் உறுதி செய்யும் நோக்கில் பரிசோதனைக்கு உட்படுத்த கொழும்பிற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments