பதற்றத்தில் இலங்கை?


கோவிட் 19 வைரஸ் பரவல் இலங்கையினை முழு அளவில் புரட்டிப்போட்டுள்ளது.
பாடசாலைகள்,பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் இழுத்து பூட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது திரையரங்குகளும் பூட்டப்படுகின்றது.
இதனிடையே மக்கள் ஒன்று கூடும் சந்தைகள்,பொது போக்குவரத்து மார்க்கங்களும் மூடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிiடையே கிழக்கில் கொவிட் 19   வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச பல்கலைக்கழகங்களை சனிக்கிழமை( 14)  ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, தென்கிழக்கு பல்கலைக்கழங்கத்தில்  எதிர்வரும் மார்ச் 16, 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கை 13 ஆவது பட்டமளிப்பு விழா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.


No comments