பாடசாலைகளை மூடத் திட்டமா?

கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (12) முதல் இம்மாதம் 26ம் திகதி வரை விடுமுறை வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமன 'நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. பாடசாலைகளை மூடுவதாக இல்லையா என்ற முடிவு இன்று (12) மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுமுறை அறிவித்தால் இம்முறை முதலாம் தவணைப் பரீட்சை இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments