மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டம்

வட கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (09) மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமாகிய பேரணி, பிரதான வீதியூடாக காந்திபூங்கா வரையில் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும், உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம், காணாமல் போனோருக்கான அலுவலகத்தினை நிராகரிக்கின்றோம், காணாமல ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும், கலப்பு பொறிமுறை வெறும் கண்துடைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்தனர்.
No comments