பாதி உண்மையும் மீதி பொய்யும் கூறிய அம்பிகா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி ஒன்று கோரிக்கை விடுத்தது. அது குறித்து நிச்சயமான முடிவை எடுக்கவில்லை எனவும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அவர் நேற்று (08) நள்ளிரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அம்பிகா சற்குணநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு,

இதேவேளை ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியதை எதிர்த்து அவர் இராஜினாமா செய்தார் என்று, இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் போலிப் பிரச்சாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வேட்பாளராக அம்பிகா நிறுத்தப்பட்டமை தமிழ் அரசுக் கட்சி அடிப்படையில் உறுதியான விடயம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதன்படி அம்பிகா சற்குணநான் மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோரை வேட்பாளர்களாக அறிமுகம் செய்யும் நோக்கில் நேற்று (08) தென்மராட்சியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்விற்கு இருவரும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments