வட்டுக்கோட்டை மகளிர் அணியின் மகளிர் தின பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சரவணபவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை மகளிர் அணியின் மகளிர் தின பேரணி இன்று (09) யாழில் இடம்பெற்றது

சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி மகளிர் தின பேரணி ஆரம்பமாகி, சுழிபுரம் பிரதேச சபை மண்டபத்தைச் சென்றடைந்து பேரணி நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

இதையடுத்து, சுழிபுரம் பிரதேச சபை மண்டபத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.No comments