மூன்று வருடமாக அஞ்சலிக்கிறாராம் கஜதீபன்?


படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிற்கு மூன்று வருடங்களாக அஞ்சலி செலுத்துவதாக புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் வேட்பாளரான கஜதீபன்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னராக ஊர் நிகழ்வுகளில் எல்லாம் தாமாக முண்டியடித்து நிற்பது அரசியல்வாதிகளது வேலையாகும்.

அவ்வகையில் நாடாளுமன்றத்தில் நான்கரை ஆண்டில் ஒரு தடவை மட்டுமே பேசிய சித்தார்த்தன் அதில் முன்னிற்கு நிற்கின்றார்.அவரது வலது கரமான கஜதீபன் தற்போது அந்த இடத்தை பிடிக்க முன்னிற்கு வந்துள்ளார்.

அவர் இன்று பகிர்ந்துள்ள தகவலில் பொலிசாரால் கடந்த 2016ஆம் ஆண்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான சுலக்ஷனின் 28ஆவது பிறந்த தின நினைவஞ்சலி இன்று சுன்னாகம் நூல் நிலைய அருகில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் குடும்பத்தாரால் நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்து 03ஆவது ஆண்டாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினோம் என தெரிவித்துள்ளார்.

No comments