நாவாந்துறை,ஜந்து சந்தி கண்காணிப்பினுள்?


கொரோனா தொற்றினால்  நேற்றைய தினம் உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றது.

கடந்த 11ம் திகதி யாழில் திருமண நிகழ்விற்காக வருகை தந்திருந்த அவர் சந்தித்த மற்றும் அவர் பங்கெடுத்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 130 பேரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் யாழ்ப்பாணம் நாவாந்துறை காதீர் அபூபக்கர் வீதியில் தங்கியிருந்த மூன்று குடும்பமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்றையதினம் உயிரிழந்தார்.இந்நிலையில், அந்நபர் நாவாந்துறை பகுதியில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கி சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மூன்று குடும்பங்களுமே கிராமசேவையாளரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே அவர் தங்கியிருந்த பகுதி, திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பழகியவர்கள் என 130 பேரை தேடும் பணி தீவிரமாகியுள்ளது. அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதேவேளை நாவாந்துறை மற்றும் ஐந்து சந்திப்பகுதிகள் கண்காணிப்பினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments