விளையாடவல்ல ஊரடங்கு:கட்டளை தளபதி?


யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் ஒன்று கூடி மைதானத்தில் விளையாடுவதற்கோ அல்லது வீதிகளில் பயணிக்கவோவல்ல. கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே என யாழ்ப்பாண மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதியினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதனை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்த்து வீட்டிலிருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு ருவான் வணிகசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் மனித நேய தரப்புக்களை இலங்கை இராணுவம் தடுத்துவருகின்றது.

இதற்கெதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் ஒன்று கூடி மைதானத்தில் விளையாடுவதற்கோ அல்லது வீதிகளில் பயணிக்கவோவல்ல என விளக்கமளித்துள்ளார்.

No comments