வருபவர்கள் கெதியாக வரவேண்டும்:அவசரத்தில் மனோ?


சஜித்துடன் கூட்டு வைப்பது தொடர்பில் ரணில் தரப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லையென மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் அன்னப்பறவை சின்னத்தை தருகிறேன், ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளராக தான் நியமிக்கப்பட வேண்டும் அல்லது தான் சொல்பவர் நியமிக்கப்பட வேண்டும் என ரவி கருணா நிபந்தனை விதித்தார். அது ஏற்றுகொள்ளப்படவில்லை.
இப்போதும் அன்னப்பறவை சின்னத்தை தருகிறேன், சஜித் கொழும்பில் போட்டியிடக்கூடாது என மீண்டும் ஒரு நிபந்தனையை ரவி கருணா விதித்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது.
விஷயம் என்னவென்றால், இதுவெல்லாம் இன்று “டூ லேட், ப்ரதர்". நாங்கள் கடந்த முறை போல் எவருக்காகவும் காத்திருந்து ஏமாற தயாரில்லை. ஒரு குழு ஐதேகவுடன் பேச்சுகளை நடத்துகின்ற அதேவேளை சமாந்தரமாக இன்னொரு குழு தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டது.
மிக அதிக வாக்காளர்கள் இருக்கும் மாவட்டத்தில் சஜித் போட்டியிட்டால், அது சிங்கள வாக்குகளை இழுத்து எடுக்க உதவும். கொழும்புடன் சஜித்துக்கு பூர்வீக தொடர்பும் இருப்பதால் அவர் கொழும்பில் போட்டியிடவேண்டும் என கடந்த மாதமே தீர்மானித்து விட்டோம்.
எனவே இப்போது வந்து எவரும் குறுக்கே, நெடுக்கே ஓட முடியாது. சும்மா, நிபந்தனை போட்டு, சிறுவர்களை வைத்துக்கொண்டு, சிரிப்பு காட்ட முடியாது.
முழு ஐதேக அங்கத்தவர்களும், பங்காளி கட்சிகளும் இங்கேதான் இருக்கிறோம். இன்னமும் பல புது கட்சிகாரர்களும் வருகிறார்கள். வந்து சேருங்கள். கதவு மூட முன் வந்து சேருங்கள். எல்லோரும் ஒன்றாய் முன்னோக்கி போவோம்! இதுதான் எம் செய்தி

No comments