மன்னாரில் பெண்கள் போராட்டம்!

பயங்கரவாதச் சட்டத்தை நீக்கக் கோரி மன்னாரில் பெண்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்தியுள்ளனர்.


பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரியும் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பஸார் பகுதியைச் சென்றடைந்தது.

பேரணியாகச் சென்றவர்கள் பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடி இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடமாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் குறித்த பேரணி இடம்பெற்றது.

'போராட்டத்தில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பட்டார்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்

No comments