யாழ்.ஆயர் யார் பக்கம்?


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அரச ஆதரவை யாழ்.ஆயர் எடுப்பாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் தேர்தலில் மக்கள் கட்சிகளை பார்க்காது சிறந்த தலைவர்களை தெரிவு செய்ய வேண்டுமென பங்குத்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளை பார்க்காது சிறந்த தலைவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முன்வரவேண்டும் என ரவிச்சந்திரன் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் 16 ஆசனங்களை ஒரு கட்சிக்கு வழங்கினோம் ஆனால் தற்போது வரை நமக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பிரச்சனை மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை போன்ற தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

 எனவே எதிர்வரும் தேர்தலின் போது மக்கள் விழிப்பாக கட்சிகளை; பார்க்காமல் சிறந்த தலைவர்களை தெரிவு செய்வதன் மூலம் நமக்கு முன்னால் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.

No comments