இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு?

கொரோனா வைரஸ் பரவல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்ததுடன், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள நிலைமை காரணமாக இந்த வாரம் முழுவதும் கொழும்பு பங்குச்சந்தையில் சடுதியான சரிவு ஏற்பட்டது.
பங்குச்சந்தையில் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 6.22 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது.


நாடளாவிய ரீதியில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக உரிய நேரத்திற்கு முன்னதாகவே சந்தை நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
கொரோனா வைரஸ் நாட்டில் பரவியதன் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மையால் கொழும்பு பங்குச்சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில் விலைச்சுட்டெண் 12 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியும் சடுதியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கு அமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 186.93 சதமாக அமைந்திருந்தது.
தற்போதைய நிலையில் கடந்த 10 நாட்களில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி சுமார் 3 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

No comments