மக்கள் வெள்ளத்தில் கச்சதீவு திருவிழா

 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி இன்று (07) காலை சிறப்புற ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் , இந்தியா சிவகங்கை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை லூர்துராஜா, தஞ்சாவூர் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் மற்றும் இலங்கை இந்திய குருக்கள் இணைத்து கூட்டுத்ததிருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழாவில் இந்திய துணைத்தூதுவர் பாலசுப்ரமணியம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனாேல்ட், முப்படைகளின் தளபதி றியல் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன, யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் றுவன் வணிகசூரிய, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை இந்திய பக்தர் சுமார் 7000 பேர் கச்சதீவு புனித அந்தோனியாரை நேரில் தரிசித்தனர்.
No comments