இத்தாலியில் நேற்று மட்டும் 41 பேர் பலி! 148 ஆக உயர்ந்தது கொரோனா உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களில் 41 பேர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளனர் என இத்தாலியச்
செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் இதுவரை 148 பேர் இத்தாலியில் இறந்துள்ளனர். இது சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் உயிரிழந்தவர்கள் வரிசையில் இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது. 107 பேர் உயிரிழந்த நிலையில் ஈரான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இத்தாலியில் தற்போது 22 பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3858 பேர் உள்ளாகியுள்ளனர்.

இத்தொற்று நோய் காரணமாக பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. வயோதிபர்கள் வீட்டுக்குள் இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். உதைபந்தாட்டப் போட்டிகள் மூடிய திடலினுள் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments