கொரோனா! ஒரு நாளில் இத்தாலியில் 368 பேர் பலி!

கொரோனா வைரஸ் நோய் காரணமாக இத்தாலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 368 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய
உயிரிழப்புடன் சேர்த்து இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,809 உயர்ந்துள்ளது.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்க 21,157 இருந்து 24,747 ஆக உயர்ந்துள்ளது என நாட்டின் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கொவிட்-19 தொற்றுநோயின் பரவலைக் குறைக்க தங்கள் குடிமக்களுக்கு கட்டுப்பாடுகளை முடுக்கிவிட்டன.

உலகளவில் 153,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர். 6,000 பேரைக் இந்நோய் கொன்றுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

No comments